மணிப்பூர் மக்கள் பெண்களை அவர்களது தாயாக மதிக்கிறார்கள்: மணிப்பூர் முதல்வர்

மணிப்பூர் மக்கள் மாநிலத்தில் உள்ள பெண்களை தங்களது தாயாக கருதுவதாகவும், சில விஷமிகளின் கீழ்த்தனமான செயல்களால் மணிப்பூரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
மணிப்பூர் மக்கள் பெண்களை அவர்களது தாயாக மதிக்கிறார்கள்: மணிப்பூர் முதல்வர்

மணிப்பூர் மக்கள் மாநிலத்தில் உள்ள பெண்களை தங்களது தாயாக கருதுவதாகவும், சில விஷமிகளின் கீழ்த்தனமான செயல்களால் மணிப்பூரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர நிகழ்வை கண்டிக்கும் விதமாக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மணிப்பூர் மக்கள் பெண்களை அவர்களது தாயாக மதிக்கிறார்கள். ஆனால், சில விஷமிகள் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வை வன்மையாக கண்டிக்கும் விதமாக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர் என்றார்.

முன்னதாக, மணிப்பூர் சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே வழங்கலாம் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com