விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

அமர்நாத்தில் 2.90 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை சுமார் 2.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

News image
Updated On :21 ஜூலை 2023, 8:10 am

DIN

அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை சுமார் 2.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 1-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 20 நாளில் குகைப் பனிலிங்கத்தை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

இந்நிலையில், 4,600 பேர் அடங்கிய மற்றொரு குழு 169 வாகனங்களில் பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. 

அதில், 2,850 பேர் 106 வாகனங்களில் பஹல்காம் பாதையிலும், 63 வாகனங்களில் 1,825 பேர் பால்டால் வழியாகவும் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

62 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதியோடு நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.