மேகாலயா முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல்: 18 பேர் கைது!

மேகாலயா முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக 18 பேரை காவல் துறையினர்  செய்துள்ளனர்.
மேகாலயா முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல்: 18 பேர் கைது!

மேகாலயா முதல்வர் அலுவலகம் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 18 பேரை காவல் துறையினர்  செய்தனர். 

நீண்ட காலமாக, கரோ மலைப் பகுதியில் உள்ள சில அமைப்புகள் துரா நகரத்தை மாநிலத்தின்  குளிர்கால தலைநகராக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 நாள்களாக, கரோ மலைப் பகுதியில் உள்ள சமூக அமைப்பு ( A’chik Conscious Holistically Integrated Krima) குளிர்கால தலைநகராக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், நேற்று  முதல்வர் சங்மா இரண்டு போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு அமைப்பில் உள்ளவர்கள் முதல்வரின் அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற 5  காவலர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் வைக்கப் போவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவத்தில் அரசியல் சதி இருப்பதாக காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வால் மேற்கு மேகாலயா நகரத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் துராவில் உள்ள முதல்வர் கான்ராட் கே. சங்மாவின் அலுவலகம் மீது திங்கள்கிழமை மாலை  நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 18 பேரை காவல் துறையினர்  கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com