மேற்கு வங்கத்தில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறது: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

மக்களை பிளவுப்படுத்தி மாநிலத்தின் நிலை மோசமாக இருப்பது போல காட்டுவதற்காக பாஜக முயற்சி செய்கிறது என தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தியே பாஜக இவ்வாறு திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் பேசியதாவது: தில்லியில் அண்மையில் நடைபெற்ற மூத்த  தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பாஜக திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. திரிணமூல் காங்கிரஸின் வாக்கினைப் பிரிக்கும் திறன் படைத்த கட்சிக்கு நிதியுதவி அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தில்லியில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அந்த சந்திப்பில் இடம் பெற்றவர்களின் நான் கூற மாட்டேன். அவர்கள் சமுதாயத்தை ஜாதி மற்றும் மதம் அடிப்படையில் பிளவுப்படுத்த நினைக்கிறார்கள். அவர்கள் பெண்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை பெரிதுப்படுத்தி மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக காட்ட நினைக்கிறார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com