பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்றும் முடங்கியது.

News image
Updated On :27 ஜூலை 2023, 5:55 am

தில்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்றும் முடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாள்களாக மணிப்பூர் கலவரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் நேற்று கொண்டுவந்தது. இதனை அவைத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு இன்று கருப்பு உடை அணிந்து வந்த இந்தியா கூட்டணியின் எம்பிக்கள், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்களவையில் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவைத் தலைவர் ஓம் பிர்லாவின் இருக்கை முன் பதாகைகளுடன் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.