ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காஷ்மீரில் கனமழை: அமர்நாத் பயணிகள் அவதி!

காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். 

News image
Updated On :27 ஜூலை 2023, 7:05 am

DIN

காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். 

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரையில் இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 11 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 

இந்நிலையில் 3,111 பேர் அடங்கிய அடுத்த குழு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று புறப்பட்டுச் சென்றனர். அதில் 2,303 ஆண்கள், 750 பெண்கள், 11 குழந்தைகள், 47 சாதுக்கள் பால்தால் மற்றும் பஹல்காம் வழியாக சென்றுள்ளனர்.

பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு பாதையிலும் கனமழை பெய்து வருவதால், பலத்த பாதுகாப்புடன் பயணிகள் குகைக் கோயிலை நோக்கி சென்றுள்ளனர். 

இடைவிடாமல் பெய்த மழையால் குகைக்கான மலையேற்றத்தில் உள்ள கெல்னாரில் பாலம் ஒன்று சேதமடைந்ததாகவும், ஆனால் உடனடியாக அது சரிசெய்யப்பட்டதாக ஆலய வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

பயணிகள் வசதிக்காக இரண்டு பாதையிலும், ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.