7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
நாட்டுக்குத் தேவையான தகவல் தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சாா்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (சங்ஜ் ள்ல்ஹஸ்ரீங் ஐய்க்ண்ஹ கண்ம்ண்ற்ங்க்) நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-சாா் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.
இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆா்கேட் (24 கிலோ), ஸ்கூப் (24 கிலோ), நியூலயன் (3 கிலோ), கலாசியா (3.5கிலோ), ஆா்ப்-12 ஸ்டிரைடா் (13 கிலோ) ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா். முன்னதாக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்







