கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எதிர்க்கட்சித் தலைவருடன் மாநிலங்களவை தலைவர் பேச்சு!

மாநிலங்களவைத் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

News image
Updated On :31 ஜூலை 2023, 10:22 am

DIN

மாநிலங்களவைத் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

8-வது நாளான இன்று மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க பட்டியலிடப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமளி தொடர்ந்தது.

இதையடுத்து மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து ஜகதீப் தன்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன், மாநிலங்களவை உறுப்பினர் சையது நசீர் ஹுசைன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.