மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை பாதிப்புக்குள்ளான வடகிழக்கு மாநிலத்தில் கலவரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவித்திருந்தார்.
மணிப்பூரில் கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நேரில் ஆய்வு மேற்கொண்டாா். பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2000 ஆயுதங்கள் போலீஸாரின் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சரின் எச்சரிக்கைகுப்பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் 140 ஆயுதங்கள் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களில் பதற்றம் தணிந்ததையடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.