தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ரயில் விபத்து நடந்த இடத்தில் சிபிஐ ஆய்வு!

ஒடிஸாவில் ரயில் விபத்து நடந்த பாலாசோரில் மத்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :6 ஜூன் 2023, 7:06 am

ஒடிஸாவில் ரயில் விபத்து நடந்த பாலாசோரில் மத்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் விபத்தை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் மத்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

ரயில் விபத்து குறித்து இதுவரை யார் மீதும் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது.

இந்த விபத்தில் கோரமண்டல் ரயில் பயணணம் செய்தவா்களில் 275 போ் உயிரிழந்தனா். 1,100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த நிலையில், பலியான 275 பேரில் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்த  200க்கும் மேற்பட்டோர் ஒடிஸாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அடையாளம் காணப்பட்ட 80 உடல்களில், 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.