காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் விரைவில் புதிய கட்சித் தொடங்கவுள்ளதாக அறிவித்தது குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதல்வா் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் குற்றம் சாட்டி வருகிறார்.
இதனால், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியின் மீதி அதிருப்தி அடைந்த சச்சின் பைலட், ஊழலுக்கு எதிராக மே 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டார்.
சச்சின் பைலட்டின் இந்த செயலால், அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங், சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்குவது குறித்து எதுவும் என்னிடம் பேசவில்லை. அவர் அதுபோன்று செய்யமாட்டார் என்று நம்புகிறேன். அவர் இந்த குறுகிய காலத்திலேயே புதிய கட்சி தொடங்குவது சரியல்ல. அவருக்கு அது தேவையில்லாத ஒன்று எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் நியமனம்!

யார் தற்குறி? தகாத வார்த்தைகளால் கமெண்ட் செய்தவர்களுக்கு மிஷா கோஷல் பதில்!
சிக்கன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! கறிக்கடைக்காரர்கள் போராட்டம் வாபஸ்

தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



