ஜன நாயகன் திரைப்படம் பற்றிய பதிவில் தகாத வார்த்தைகளால் கமெண்ட் செய்தவர்களுக்கு நடிகை மிஷா கோஷல் பதிலடி கொடுத்துள்ளார்.
சேரனின் பொக்கிஷம் படத்தில் துணை நடிகையாக அறிமுகமான மிஷா கோஷல் சென்னையைச் சேர்ந்தவர், இவர், ஏழாம் அறிவு, விசாரணை, மெர்சல் படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணையத்தொடரில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். விஜய் ரசிகையான இவர் ஜன நாயகன் படத்தினைப் பார்த்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவில் மாற்றுக் கட்சியினரும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தகாத வார்த்தைகளில் கமெண்ட் செய்து வந்தால் அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதனால், கோபமடைந்த நடிகை மிஷா கோஷல் விடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
எனக்கு ஒன்றுமட்டும் புரியவே இல்லை. உலகத்தில் அத்தனை நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள். அதில் யாரைப் பிடிக்க வேண்டும், யாருடைய படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்கக் கூடாது என்பதெல்லாம் ஒருவரது தனிப்பட்ட விருப்பம். நாங்கள் தளபதி விஜய்யை ரசிப்பதால் எங்கள் மீது வெறுப்பு காட்டுவதா?
நாங்கள் என்ன தவறு செய்தோம்? அப்படி என்ன தவறு செய்தோம்? ஜனவரியில் இருந்து இந்தப் படத்திற்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் எங்கள் நாயகனின் படத்தைக் கொண்டாடுவோம். எங்களது செலவில் சீட்டை முன்பதிவு செய்து உட்கார்ந்து பார்க்கிறோம், மகிழ்கிறோம். அல்லது சோகமாக இருக்கிறோமோ உங்களுக்கு என்ன பிரச்னை? உங்களுக்கு இதையெல்லாம் பார்க்க பிடிக்கவில்லை எனில் போகாதீர்கள்.
இதையெல்லாம் உங்களைச் செய்ய சொல்லி யார் கெஞ்சியது? ஏன் தேவை இல்லாமல் கமெண்ட் செய்கிறீர்கள். காரணமே இல்லாமல் வெறுப்பைப் பரப்புகிறீர்கள். இது உங்கள் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நான் யாருடைய படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன? வேறு ஒரு நாயகனின் படம் பார்த்தால் நீங்கள் இப்படி பேசுவீர்களா? இவ்வளவு பேச மாட்டீர்கள் தானே?
பின் தொடர்பவர்களாக இருந்து மிகவும் கேவலாமான இழிவான செயலைச் செய்வது என்பது இந்தளவுக்கு வெறுப்பைக் காண்பிப்பதுதான். ஜன நாயகன் படம் பார்த்ததால் நான் தற்குறியா? ஒரு குட்டி குழந்தைக்கூட உங்களைவிட புத்திசாலியாகவும் பக்குவமாகவும் நடந்துகொள்வார்கள்.
வாழு, வாழ விடு. கருப்பு உடை அணிந்திருக்கிறேன், அசைவம் சாப்பிடுகிறேன் என்னைப் பின் தொடராதீர்கள். என் முடி சுருட்டையாக இருக்கிறது. பின் தொடராதீர்கள். இதெல்லாம் ஒரு காரணமா? நீங்கள் விஜய் படம் பார்ப்பதால் பின் தொடர மாட்டேன் என்கிறீர்கள். தயவு செய்து செய்யுங்கள். உங்களைப் போல பக்குவமற்ற முட்டாள்கள் தேவையே இல்லை.
எனது பக்கத்தை விட்டு வெளியேறுங்கள். என்னை அமைதியாக இருக்க விடுங்கள். எனக்கு என்ன செய்ய வேண்டுமோ நான் அதைத்தான் செய்வேன். தளபதி விஜய் படம் பிடித்தால், பார்ப்பேன். அஜித், சூர்யா படங்கள் பிடித்தாலும் பார்பேன். நான் எதைப் பார்க்க வேண்டும் பார்க்கக் கூடாதெல்லாம் எனக் கூறுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.
எனக்குப் பிடித்த நாயகனின் படத்தைப் பார்ப்பதும் ரசிப்பதும் தற்குறியா? தயவு செய்து பக்குவமடையுங்கள். குழந்தையாக இல்லாமல் சற்று வளருங்கள் எனக் கூறியுள்ளார்.
Summary
Who is the ignoramus? Misha Ghoshal hits back at those who posted abusive comments!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிகமான மக்கள் அரசியல் பேசுவதற்குக் காரணமே விஜய்தான்: மிஷா கோஷல்

மனைவிடன் தகாத உறவு வைத்திருந்தவா் கொலை

மூன்று பெண்களுடன் தகாத உறவு... ஆனால்! ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்!

கோவை: சிறுவன் கொலை வழக்கில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள், தாய்க்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



