நடிகை மிஷா கோஷல் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் பேசியது வைரலாகியுள்ளது.
சேரனின் பொக்கிஷம் படத்தில் துணை நடிகையாக அறிமுகமான மிஷா கோஷல் சென்னையைச் சேர்ந்தவர். பின்னர், ஏழாம் அறிவு, விசாரணை, மெர்சல் படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணையத்தொடரில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். விஜய் ரசிகையான இவர் ஜன நாயகன் படத்தினைப் பார்த்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் மிஷா கோஷல் கூறியிருப்பதாவது:
தளபதியில் இருந்து நேஷனல் க்ரஷாக மாறியதற்கு காரணங்கள் இருக்கின்றன.
நடிகர் விஜய் உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் மக்கள் மனதில் இடம்பிடித்த விதம் வியக்கத்தக்கது. திரை நாயகனில் இருந்து நமது நிஜமான நாயகனாக மாறியுள்ளீர்கள். அதிகமான மக்கள் அரசியல் பேசுவதற்கு ஒரே காரணம் நீங்கள்தான். அரசியல் என்பது சாக்கடையாக மட்டுமே இருக்காது என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
நாங்கள், உங்கள் ரசிகர்கள், பின்தொடர்பவர்கள் நீங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளையும் நம்புகிறோம். நீங்கள் எங்களுக்கு நல்லது மட்டுமே செய்வீர்களென நம்புகிறோம். முதல்வரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். தற்போது நான் தீவிரமான ரசிகராக மாறியுள்ளேன். மெர்சல் படத்தில் உங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் எனது நட்சத்திரங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவில் எதிர்க்கட்சியினரும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தகாத வார்த்தைகளில் கமெண்ட் செய்து வந்தால் அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
Summary
The only reason more people have started taking interest in politics is Vijay says actress Misha Ghoshal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நம்பகத்தன்மையே சொத்து!

மக்களாட்சியின் தேக்க நிலை!

மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

இன்ஸ்டா சப்ஸ்கிரப்ஷன் கேலிக்குப் பதிலளித்த நந்திதா ஸ்வேதா..! மன்னிப்பு கோரிய யூடியூபர்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager




