தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஜார்க்கண்ட்: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 3 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

News image
Updated On :9 ஜூன் 2023, 10:35 am

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் பவ்ரா கோலியரி பகுதியில் உள்ள பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. 

சுரங்க விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

நிலக்கரி சுரங்க விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.