

அரபிக்கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயல் தொடர்பான நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த புயலானது துவாரகாவுக்கு தெற்கு-தென்மேற்கில் 380 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஜூன் 15ஆம் தேதி நண்பகல் குஜராத்தின் மான்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சௌராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிபர்ஜாய் புயல் தொடர்பான நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.