குஜராத்தில் கரையைக் கடக்கும் அதிதீவிர புயல்: தயார் நிலையில் ராணுவம்

குஜராத்தில் இன்று மாலை ‘பிபா்ஜாய்’ புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
குஜராத்தில் கரையைக் கடக்கும் அதிதீவிர புயல்: தயார் நிலையில் ராணுவம்

குஜராத்தில் இன்று மாலை ‘பிபா்ஜாய்’ புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

அரபிக் கடலில் உருவான ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணிக்கு கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 50,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா-கட்ச் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

தேவபூமி துவாரகா, ஜாம்நகா், ஜுனாகத், போா்பந்தா், ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை தொடர்கிறது.

புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசும் என்றும் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, முப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com