கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அமர்நாத் யாத்திரையில் 40க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு தடை!

அமர்நாத் யாத்திரையில் புல்லாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள் என 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம்

கோப்புப் படம்.

Published On :

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரையில் புல்லாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள் என 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் தடை விதித்துள்ளது. 

அனைத்து இந்து தெய்வங்களிலும், சிவபெருமான் இந்தியர்களால் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் கோடை மாதங்களில் தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் தனித்துவமான வடிவத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து வருகின்றனர். 

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 62 நாள்கள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதாரங்களுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

உடல் ஆரோக்கியத்திற்காக தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இமயமலை புனித ஸ்தலத்திற்கு யாத்திரை வரும் பக்தர்கள், தினமும் காலை மற்றும் மாலை என குறைந்தது 4 முதல் 5 கிமீ வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள், குறிப்பாக ஆக்ஸிஜனை மேம்படுத்துவதற்கான பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் 14 கிலோமீட்டர் நடைபயணத்தைத் தொடங்குவதற்கு முன்,  அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்து வர வேண்டும்.  

புலாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, வறுத்த பப்பாளி, வறுத்த மற்றும் துரித உணவுப் பொருள்கள், பானங்கள் என தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பக்தர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, சில அரிசி உணவுகளுடன் தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துச்செல்ல பரிந்துரைத்துள்ளது.

தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் அபராதங்கள் விதிக்கப்படும் என ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.