உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மாநிலங்களுக்கு அரிசி விற்பனை இல்லை!

இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று மத்திய அரசு வியாழக்கிழமை முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:38 am IST


இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று மத்திய அரசு வியாழக்கிழமை முடிவெடுத்துள்ளது.

இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும், தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு மாநிலத்துக்கும் இடையூறு அளிப்பதற்காக அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம், ஏழைகளுக்கு மாதம்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கர்நாடக அரசின் தேர்தல் வாக்குறுதியாக அளித்த திட்டத்தை முடக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கு இலவச அரிசு வழங்கி வரும் கர்நாடம், தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் பாதிக்கப்படவுள்ளது. தேசிய உணவுப் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் மாதம்தோறும் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு 5 கிலோ இலவச அரிசி வழங்கி வருகின்றது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுவதாவது, “மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் மாநில அரசுகள் இலவச அரிசி திட்டத்தை அறிவிக்கின்றன. திட்டத்துக்கு தேவையான அரிசியை வழங்குவீர்களா என்று எந்த மாநிலமும் மத்திய அரசிடம் கேட்பதில்லை. ஆனால், மத்திய அரசு தன்னிடம் உள்ள இருப்புகளை பொறுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இயற்கை பேரிடரை சந்திக்கும் மாநிலங்களை தவிர பிற மாநில அரசுகளுக்கு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் கோதுமை விற்பனையை செவ்வாக்கிழமையுடம் மத்திய உணவு அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

இந்த முடிவு திடீரென எடுக்கவில்லை என்றும், மத்திய அமைச்சர்களின் நீண்ட நாள்கள் ஆலோசனைக்கு பிறகு ஜூன் 13 அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் உள்ள 3 அல்லது 4 மாநிலங்கள் தங்களின் திட்டத்துக்காக அதிக தானியங்களை வாங்கினால், மொத்த தானியங்களும் இந்த மாநிலங்களுக்கு கொடுக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், நாடு முழுவதும் விலைவாசியை கட்டுப்படுத்துவது பிரச்னையாக இருப்பதாக உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் இனிவரும் காலங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது சவாலானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.