அமர்நாத்தில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி மரணம்!

அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்த   இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி(ஐடிபிபி) அதிகாரி மாரடைப்பால் மரணமடைந்தார். 

ஜம்மு-காஷ்மீரில் கேண்டர்பால் மாவட்டத்தில் சோனாமார்க்கில் பாதுகாப்புப் பணிக்காகச் சென்றிருந்தார் 58 வயதான ஆசி மதன் ராஜ். இந்திய-தலிபான் எல்லைப்பாதுகாப்பு காவல் அதிகாரியான இவர் பால்டால் முகாமுக்கு அருகில் திடீரென மயக்கமடைந்தார். 

உத்தரகண்ட்டை சேர்ந்த ராஜ் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார். 

அவரது திடீர் உயிரிழப்புக்கு காரணம் அறியப்படவில்லை என்றாலும், அதிக உயரத்தில் குறைந்த ஆக்ஸிஜன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 1-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்களும் உயிரிழத்தல் என்பது ஒவ்வொரு நிகழ்ந்து வருவது ஒன்றாகவே உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com