மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் மச்சில் துறையில் எல்லைக் காட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற நான்று பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

News image
கோப்புப்படம்
Updated On :23 ஜூன் 2023, 6:22 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் மச்சில் துறையில் எல்லைக் காட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற நான்று பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மச்சில் துறையின் காலா வனத்துறை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களின் சதித்திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். 

ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்த கூட்டு நடவடிக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர். 

கடந்த வெள்ளிக்கிழமை ஜூமாகுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்த நிலையில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.