வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாட்டில் கடந்த 2020-க்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது!

இந்தியாவில் கடந்த 2020-க்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 33 ஆகப் பதிவாகியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூன் 2023, 6:31 am

DIN


 
இந்தியாவில் கடந்த 2020-க்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 33 ஆகப் பதிவாகியுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை (4,49,94,032) கோடியாக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை  5,31,903 ஆக உள்ளது.

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,606 ஆகப் பதிவாகியுள்ளது. 

இதுவரை மொத்தம் 4,44,60,523 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.