கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அமர்நாத் பயணிகளின் முதல் குழு யாத்ரி நிவாஸ் முகாமை அடைந்தது!

அமர்நாத் யாத்திரையின் முதல் குழு ஜம்முவில் உள்ள யாத்ரி நிவாஸ் முகாமை அடைந்தனர். 

அமர்நாத் யாத்திரையின் முதல் குழு ஜம்முவில் உள்ள யாத்ரி நிவாஸ் முகாமை அடைந்தனர். 

62 நாள்கள் நிகழும் இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறுகிறது. 

அதன்படி, அமர்நாத் பயணிகளின் முதல் குழு இன்று யாத்ரி நிவாஸ் முகாமை அடைந்ததும் மிகுந்த உற்சாகத்தில் ஈடுபட்டனர். முகாமை சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பஹல்காமின் நூன்வான் மற்றும் காஷ்மீரின் கேண்டர்பால் மாவட்டத்தில் பால்டால் என்ற இடத்திலிருந்தும் பக்தர்கள் குகைக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 

அமர்நாத் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. மேலும், பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. 

தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் அமர்நாத் புலிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com