ராகுலின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: காங்கிரஸ்

மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ராகுலின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: காங்கிரஸ்

மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூரின் பிஷ்னுபூர் பகுதிக்கு அருகில் ராகுல் காந்தியின் வாகனம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு  ஆறுதல் கூற சென்றார் ராகுல் காந்தி. மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் மௌனம் சாதிப்பது குறித்து பிரதமருக்கு கவலையில்லை. அவர் மணிப்பூர் மாநிலத்தின் நிலைமையை அப்படியே விட்டுவிட்டார். மணிப்பூர் மக்களுக்கு ஆறுதலளிக்கச் சென்ற ராகுல் காந்தியை தங்களது சர்வாதிகர முறையைப் பயன்படுத்தி இந்த இரட்டை என்ஜின் அரசு தடுக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் விதிமுறைகள் சிதறடிக்கப்படுகின்றன. மணிப்பூருக்கு தேவை அமைதியே தவிர மோதல் அல்ல எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com