
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு பின்னணியில் அவர்களது அரசியல் ஆதாய நோக்கம் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் எண்ணத்தை கைவிடும் படி வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: தீபிகா-ஹரிந்தர் இணை வெற்றி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் இந்த பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முடிவு நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து , ‘ஒரு நாடு, ஒரு கலாசாரம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தும் முடிவாகவே பார்க்கப்படுகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவை மத்திய அரசும், சட்டக் குழுவும் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த பொது சிவில் சட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.