புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களுடன் கேஜரிவால் ஆலோசனை

தில்லியில் அனைத்து எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தவுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :1 மார்ச் 2023, 10:44 am

DIN

தில்லியில் அனைத்து எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தவுள்ளார். 

தில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது சிபிஐ காவலில் உள்ளார். 

இதையடுத்து அவர் துணை முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார். அதன்படி அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. 

மணீஷ் சிசோடியாவின் கைதுக்குப் பின்னர் அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 

கேஜரிவாலின் இல்லத்தில் இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

ஆம் ஆத்மியில் இரு முக்கிய மூத்த அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஹவாலா பணமோசடி வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.