வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் 'நியூ லுக்'கில் ராகுல் காந்தி!

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :1 மார்ச் 2023, 7:25 am

DIN

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் டிரினிட்டி கல்லூரியில் எம்.ஃபில். படிப்பை மேற்கொண்டாா். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக அவர் பிரிட்டன் சென்றுள்ளார். 

Story image

முன்னதாக, தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் செல்வது குறித்து ராகுல் தனது ட்விட்டா் பக்கத்தில் ‘நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் செல்வதை எதிா்நோக்கியுள்ளேன். அங்கு புவிசாா் அரசியல், சா்வதேச உறவுகள், பிக் டேட்டா, ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த தலைவா்கள் மற்றும் நிபுணா்களைச் சந்திக்க இருப்பதையும் எதிா்பாா்த்து காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

Story image

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் அவரது புதிய தோற்ற(நியூ லுக்) புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.