
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தி-வங்கதேச சர்வதேச எல்லைக்கு அருகே 135 அரிய வகை பறவைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு பறவைகளைக் கடத்தவிருந்த நிலையில் கடத்தல்காரர்களின் முயற்சிகளை சரியான நேரத்தில் முறியடித்துள்ளனர் பிஎஸ்எப் வீரர்கள்.
வழக்கம்போல் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய செயல்கள் நடைபெறுவதை உணர்ந்து உடனடியாக அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து ஓட தொடங்கிய கடத்தல்காரர்கள் அந்த இடத்தில் இரண்டு கூண்டுகளை விட்டுச்சென்றனர். அவற்றில் 135 அரிய வகை பறவைகளான கிளிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பறவைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.