
ராஜஸ்தானில் வருகிற மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அரசுப் பேருந்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மற்றும் விரைவு உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தன்று சுமார் 8.50 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7.50 கோடி நிதிச்சுமை ஏற்படும் என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: சதுரகிரி கோயிலுக்குச் செல்ல மார்ச் 4 - 8 வரை அனுமதி!
சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை 30 சதவிகிதத்திலிருந்து, 50 சதவிகிதமாக உயர்த்தும் திட்டத்திற்கும் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.