திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. மேகாலயம் மற்றும் நாகாலாந்திலும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் தலா ஒரு தொகுதி தவிா்த்து 59 இடங்களில் கடந்த மாதம் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னிலை நிலவரம்:
திரிபுரா:
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக-திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 37 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் இருந்து வருகிறது.
சிபிஎம் கூட்டணி 4 இடங்களிலும், திமோக 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
நாகாலாந்த்:
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் பாஜக 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், நாமமு 9 தொகுதிகளிலும், பிற 12 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
மேகாலயம்:
60 தொகுதிகளை கொண்ட மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி 31 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிளிலும், திரிணாமுல் 9 தொகுதிகளிலும், பிற 11 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் அமைச்சரவை! புதிய அமைச்சர்கள் யார், யார்?

நேரு விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய்!

முதல்வராகப் பதவியேற்க உள்ள விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

