2017-ஆம் ஆண்டுக்கு முன்பாக இளைஞர்களுக்கு அவர்களது அடையாளம் தெரியவில்லை: யோகி ஆதித்யநாத்

இளைஞர்கள் தங்களுக்கான அடையாளம் என்ன எனத் தெரியாமல் இருந்ததாக எதிர்க்கட்சியான சாமஜவாதியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கிப் பேசியுள்ளார். 
2017-ஆம் ஆண்டுக்கு முன்பாக இளைஞர்களுக்கு அவர்களது அடையாளம் தெரியவில்லை: யோகி ஆதித்யநாத்

இளைஞர்கள் தங்களுக்கான அடையாளம் என்ன எனத் தெரியாமல் இருந்ததாக எதிர்க்கட்சியான சாமஜவாதியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கிப் பேசியுள்ளார்.

குற்றவாளிகள் ஆளும் அரசுக்கு இணையாக ஒரு அரசாங்கத்தினை நடத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மாநில சட்ட மேலவையில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் சட்ட மேலவை மக்களுக்கு புதிய நம்பிக்கையினை கொடுத்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்னதாக உத்தரப் பிரதேச இளைஞர்கள் மத்தியில் தாங்கள் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், மக்கள் பசியின் கொடுமையில் வாடினர். பசியினால் இறப்புகள் அதிகமாகக் காணப்பட்டன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தது. திட்டமிட்டு கொலை செய்யும் செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆளும் அரசுக்கு இணையாக தங்களது இணை அரசை உருவாக்கி நடத்தினர். அனைத்து விதமான மாஃபியாக்களும் மாநிலத்தில் நிறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக அந்த நிலை மாறிவிட்டது. இளைஞர்கள் உத்தரப் பிரதேசத்தில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள். அவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள். உத்தரப் பிரதே அணி இந்த மாற்றத்தை சாத்தியமாக்கியுள்ளது.

உலக முதலீட்டார்கள் மாநாடு போன்ற பல முக்கிய நிகழ்வுகள் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது. முன்னதாக மாநிலத்தில் விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி போன்றன இருந்தன. இந்த வரிகளின் மூலம் மாநிலத்திற்கு ரூ. 49 ஆயிரம் கோடி முதல் 51 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைத்தது. இந்தத் தொகை இந்த நிதியாண்டில் 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க உள்ளது. முன்னதாக, மாநிலத்துக்கு உற்பத்தி வரி மூலம் ரூ.12 ஆயிரம் கோடி மட்டுமே வருவாயாக கிடைத்தது. ஆனால், அந்தத் தொகை இன்று ரூ.45 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. முன்னதாக இவ்வளவு பணமும் எங்கே சென்றது. அவை திருடப்பட்டன. அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் உணவகங்கள் கட்டினர்.  கடந்த 6 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் முன்னேறி வருவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com