இருமல், காய்ச்சலுக்கு மக்கள் பின்பற்ற வேண்டியவை இதுதான்: ஐசிஎம்ஆர் தகவல்!

இந்தியா முழுவதும் அண்மைக்காலமாக பரவிவரும் காய்ச்சல், தொடர் இருமலுக்கு இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை(எக்3என்2) வைரஸ் தொற்று தான் காரணமாக இருப்பதாக ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியா முழுவதும் அண்மைக்காலமாகப் பரவிவரும் காய்ச்சல், தொடர் இருமலுக்கு இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை(எக்3என்2) வைரஸ் தொற்று தான் காரணமாக இருப்பதாக ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக இருமல், காய்ச்சல் பரவலான புழக்கத்திலிருந்து வருகிறது. இதன்காரணமாக நாளுக்குநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

குளிர்காலம் மற்றும் பருவமழைக் காலம் நிறைவடைந்தபோதிலும், இந்த காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல் முதியவர்களிடையேயும், குழந்தைகளிடையேயும் இது தீவிரமாகப் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் பரிசோதனை முடிவில் கரோனா பாதிப்போ அல்லது பன்றிச் காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளையில் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலை ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. 

நாடு முழுவதும் இருமல், சளி ஒருபக்கம் இருக்க, மறுபுறம் கண்மூடித்தனமான ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது. 

பருவகால காய்ச்சல் ஐந்து முதல் ஏழு நாள்கள் நீடிக்கும். காய்ச்சல் மூன்று நாள்களுக்குப் பிறகு குறைந்துவிடும். ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். 

காற்று மாசுபாடு காரணமாக வைரஸ் தொற்று அதிகரித்துள்ளன. இது பெரும்பாலும் 15 வயதுக்குள்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. காய்ச்சலுடன் ஒருசிலருக்கு நுரையீரல் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. 

மருத்துவ நிர்வாகம் அறிகுறி சிகிச்சையை மட்டுமே மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளதே தவிர ஆண்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கவில்லை. 

ஆனால், மக்கள் அசித்ரோமைசின் மற்றும் அமோக்ஸிக்க்லாவ் போன்ற ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதன் வீரியத்தைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. உடலில் இதுபோன்ற ஆண்டிபயாட்டிக் அதிகமாகச் செலுத்துவதன் மூலம் உடம்பில் இயற்கையாக இருக்கும் எதிர்ப்புச்சக்தி வேலை செய்யாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அமோக்ஸிசிலின், நோர்ஃப்ளோக்சசின், ஓப்ரோஃப்ளோக்சசின், ஆஃப்லோக்சசின் மற்றும் லெவோஃப்ளோக்சசின் ஆகியவை பயன்படுத்துவதால் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.

காய்ச்சல், தொடர் இருமலுக்கு வீரியம் குறைவான மற்றும் பின்விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com