தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக அமித் சர்மா பதவியேற்பு!

தில்லி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி அமித் சர்மா திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 

News image
Updated On :6 மார்ச் 2023, 6:37 am

DIN

தில்லி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி அமித் சர்மா திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 

நீதிபதி அமித் சர்மாவுக்கு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

முன்னதாக பிப்ரவரி 15-ம் தேதியன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி அமித் ஷர்மாவை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பரிந்துரைத்து, மார்ச் 3-ம் தேதி மத்திய அரசு அவரது நியமனத்தை அறிவித்தது. 

உயர்நீதிமன்றத்தில் தற்போது 10 பெண் நீதிபதிகள் உள்பட 45 நீதிபதிகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.