தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒடிஸாவில் 142 இடங்களில் காட்டுத் தீ- நாட்டிலேயே மிக அதிகம்

நாட்டில் அதிகபட்சமாக ஒடிஸா மாநிலத்தின் 142 இடங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :7 மார்ச் 2023, 7:29 pm

DIN

நாட்டில் அதிகபட்சமாக ஒடிஸா மாநிலத்தின் 142 இடங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய வன ஆய்வு நிறுவனம் (எஃப்எஸ்ஐ) வெளியிட்ட தகவலின்படி செவ்வாய்க்கிழமை காலை வரை நாடு முழுவதிலும் உள்ள 391 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

வனப் பகுதிகளில் மின்னல் தாக்குதல், வட மரங்கள் உரசிக் கொள்ளுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களாலும், பற்றவைக்கப்பட்ட சிகரெட், பீடி போன்றவற்றை வட இலைகள் காணப்படும் பகுதியில் எறிதல் போன்ற மனிதத் தவறுகளாலும் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுகின்றன.

ஒடிஸாவில் 142 இடங்களிலும், சத்தீஸ்கரில் 58 இடங்களிலும், ஆந்திரத்தில் 48 இடங்களிலும், தெலங்கானாவில் 37 இடங்களிலும், ஜாா்க்கண்ட் மற்றும் கா்நாடக மாநிலங்களில் தலா 32 இடங்களிலும், மகாராஷ்டிரத்தில் 15 இடங்களிலும் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒடிஸாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிமிலிபால் தேசியப் பூங்கா உள்ள மயூா்பஞ்ச் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மாநில வனத் துறையின் உயா் அதிகாரி கூறுகையில், ‘ பல்வேறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க வனத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 3,000 வன ஊழியா்கள், 16,000 வனப் பாதுகாப்பு குழு உறுப்பினா்கள், 280 சிறப்பு படைகள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனா். மகளிா் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களுக்கும் காட்டுத் தீ சம்பவங்கள் குறித்த விழிப்புணா்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தின் தொடக்கமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபா் முதல் மாநிலத்தில் மழை இல்லை. நிலைமை மோசமடைந்து வருவதால், மழையை எதிா்பாா்த்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.