

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8(நாளை) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில்,
பெண்களைப் போற்றும் சர்வதேச மகளிர் தினம் நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டியில்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார் என்று அவர் கூறினார்.
தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.