லாலுவின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகாா் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உறவினருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 
லாலுவின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகாா் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உறவினருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 

தில்லி, பிகார் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா் நியமிக்கப்பட்டனா். அதற்குக் கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை, லாலு குடும்பத்தினா் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனா். அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக பாட்னாவில் லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ திங்கள்கிழமை சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தில்லி பண்டாரா பாா்க் பகுதியில் உள்ள தனது மகள் மிசா பாரதி வீட்டில் தங்கியுள்ள லாலுவிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் சுமாா் 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக இன்று தில்லி, பிகார் மாநிலங்களில் 15 இடங்களில் லாலு பிரசாத்தின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 

லாலு பிரசாத் மகள் மிசா பாரதி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகார் முன்னாள் எம்எல்ஏவுமான அபு டோஜனா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வழக்குத் தொடா்பாக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோரை மாா்ச் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com