பிகார் நில மோசடி தொடர்பான வழக்கில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாவுக்கு மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக தில்லி, பிகார் மாநிலங்களில் 15 இடங்களில் லாலு பிரசாத்தின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், உறவினர்களின் வீடுகளில் இருந்து ரொக்கம், தங்க நகைகள், தங்கக் கட்டிகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தேஜஸ்விக்கு இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 24ஆம் தேதி விசாரணைக்கு தேஜஸ்வி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவருக்கு 2வது முறையாக இன்று பிற்பகல் 2 மணிக்குள் ஆஜராகுமாறு கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ஆகியோரிடம் சமீபத்தில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

