நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 400ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 400ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று காலை நிலவரப்படி நாட்டில் கரோனா பாதிப்பு 402 ஆகப் பதிவாகியுள்ளது. அதேசமயம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,903 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகம் மற்றும் ஹிமாசலில் தலா ஒருவர் என இரண்டு பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,30,784 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,46,91,338 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் நோயிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,41,56,651 ஆகவும், 98.80 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 6 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...