அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

நாடாளுமன்றம் 2-வது நாளாக முடங்கியது!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இரு அவைகளும் முடங்கின.

News image
Updated On :14 மார்ச் 2023, 8:55 am


நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இரு அவைகளும் முடங்கின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனியில் இந்திய நாடாளுமன்றம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஆளுங்கட்சியும் மோதிக் கொண்டதால் நேற்று நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்றும் அதானி, ராகுல் விவகாரங்களை இரு அவைகளிலும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் எழுப்பியதால் காலை முதலே கூச்சலும் குழப்பமும் நீடித்தது.

காலை 11 மணிக்கு அவை தொடங்கியவுடன் மக்களவையும், 12 மணிக்கு மாநிலங்களவையும் எம்.பி.க்களின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, உணவு இடைவெளிக்கு பிறகு அவைகள் கூடியவுடம் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.