கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் எத்தனை தெரியுமா?

பெரும் முதலீடு இன்றி, மிகச் சிறு தொகை கொண்டு தொடங்கி மாபெரும் வெற்றிகளைக் குவித்த மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்றவை புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களாகத்தான் தங்கள் வரலாற்றைத் தொடங்கின.

Published On :

புதுதில்லி: பெரும் முதலீடு இன்றி, மிகச் சிறு தொகை கொண்டு தொடங்கி மாபெரும் வெற்றிகளைக் குவித்த மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்றவை புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களாகத்தான் தங்கள் வரலாற்றைத் தொடங்கின.

இந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நிலவரப்படி 92,683 நிறுவனங்கள் புத்தாக்க (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புத்தாக்க நிறுவனங்கள் வரி மற்றும் வரி அல்லாத சலுகைகளைப் பெற தகுதியுடையவையாகும்.

நாட்டில்  புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், அரசு ஜனவரி 16, 2016 அன்று ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அரசின் தொடர் முயற்சியால் 2016ல் 442ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 2023ல் 92,683 ஆக உயர்த்துள்ளது என்றார். 7,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவன கட்டுமானம், வீட்டு சேவைகள், தளவாடங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ளன.

அதிக எண்ணிக்கையிலான 11,099 அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்கள்  தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவை. அதைத் தொடர்ந்து சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் (8,691) நிறுவனங்களும், கல்வி துறையில் (5,962) நிறுவனங்களும், விவசாயத் துறையில் (4,653) நிறுவனங்களும் மற்றும் உணவு மற்றும் பானங்கள் துறையில் (4,523) நிறுவனங்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.