கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!

கேரள முதல்வர் வி.டி. சதீசன் நடனமாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்ட நிலையில் மெட்டாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து...

வி.டி. சதீசன் நடனமாடும் விடியோவிலிருந்து... - இன்ஸ்டாகிராம்

Published On :

கேரள முதல்வர் வி.டி. சதீசன் நடனமாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்ட நிலையில் மெட்டாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன் முதல்வர் வி.டி. சதீசன் நடனமாடுவதைப்போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தது.

திரிச்சூரைச் சேர்ந்த ரீச் யூ டாட் நிறுவனத்தின் ஏஐ காவாலா சமூக வலைதளப் பக்கத்தில் இந்த விடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் உரிமையாளரான அபிஜித் கே.எஸ்., ஒரு புகாரின் அடிப்படையில் இந்தியாவில் அந்த விடியோ நீக்கப்பட்டதாக மெட்டாவிடமிருந்து தங்களுக்கு அறிவிப்பு வந்ததாகத் தெரிவித்தார். விடியோ நீக்கப்பட்டதற்கு எதிராக புகார் அளிக்க விரும்பவில்லை எனவும் அபிஜித் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடியோ தொடர்பாக பேசிய முதல்வர் வி.டி. சதீசன், நடனமாடும் விடியோவைப் பார்த்து ரசித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் சட்டரீதியான பிரச்னைகள் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ''அந்த விடியோவைப் பார்த்தபோது, ​​மோகன்லால் மற்றும் எனது நண்பரான தமிழக முதல்வர் விஜய் ஆகியோரை விட நான் சிறப்பாக நடனமாடியிருப்பதைக் கண்டேன்; இதனைக் கண்டு நான் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

தற்போது செயற்கை நுண்ணறிவு இசை, நடனம் என அனைத்தையும் உருவாக்கி வருகிறது. இந்தப் புதிய தொழில்நுட்பங்களின் படைப்புகளைச் சட்டரீதியாக நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் படைப்புகளின் சட்டரீதியான தாக்கங்கள் குறித்தும், தற்போதைய சட்டக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் முதல்வர் கேள்விகளை எழுப்பினார்.

இந்நிலையில், முதல்வர் நடனமாடும் விடியோ சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Summary

Viral AI dance video of Keralam CM VD Satheesan taken down by Meta in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.