
மும்பை: பாலியல் எண்ணம் இன்றி, சிறுமியின் பின்புறம் மற்றும் தலையை வெறுமனே தொடுவது மட்டும் பாலியல் துனபுறுத்தல் ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு உத்தரவிட்டு, 28 வயது நபரை விடுதலை செய்திருக்கிறது.
2012ஆம் ஆண்டு குற்றவாளி 18 வயதில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், அந்த நபர் தனது பின் பகுதியில் கைவைத்து, பிறகு அப்படியே தலை வரை கொண்டு வந்து, நன்கு வளர்ந்துவிட்டாய் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க.. ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்
விசாரணை நீதிமன்றம், குற்றவாளி என்று அளித்த தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர், பாலியல் ரீதியான துன்புறத்தும் நோக்கத்தோடு செயல்படவில்லை என்பதும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை அவர் வளர்ந்துவிட்டாய் என்று கூறியிருப்பது அவர் குழந்தையாகவே பார்த்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கம் இருப்பதாக இதில் தெரியவரவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அந்த நபர் எந்த மோசமான வார்த்தையும் கூறவில்லை, அவர் செய்த செயல் சிறுமிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதில், அரசு தரப்பில், குற்றம்சாட்டப்பட்டவர், வேண்டுமென்றே இவ்வாறு செய்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதுமட்டுமல்லாமல், அவர், நன்கு வளர்ந்துவிட்டாய் என்று கூறியிருப்பது, அவர் சிறுமியை குழந்தையாகவே பார்த்திருப்பதை காட்டுகிறது எனறும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. தமிழகத்தின் தேவை வெறும் மருத்துவமனைகள் அல்ல.. அதற்கும் மேலே
இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் தவறாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆறு மாதங்கள் தண்டனை விதித்திருப்பதாகவும், இது பாலியல் நோக்கமின்றி நடந்த செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.