புது தில்லி: நாடாளுமன்றத்திலிருந்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து பேரணியாக புது தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் சென்று, அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி புகார் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஆளுங்கட்சி போன்ற காரணங்களால், கடந்த இரண்டு நாள்களாக நாடளுமன்றம் முடங்கியது.
இதையும் படிக்க.. தமிழகத்தின் தேவை வெறும் மருத்துவமனைகள் அல்ல.. அதற்கும் மேலே
அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்து வருகின்றது.
இதையடுத்து, மாநிலங்களவையின் எதிர்க்கட்சிக் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது அறையில் இன்று 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை நோக்கி பேரணியாகச் சென்று, அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதை வலியுறுத்தி புகார் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 12.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தொடங்கும் இந்தப் பேரணியில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நாடாளுமன்றத்திலிருந்து எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்லவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு, அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம், தனது பங்குகளின் விலையை உயர்த்திக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு

வீராசமுத்திரத்தில் இரவு 9 மணி வரை வாக்களித்த வாக்காளா்கள்

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

