நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும்கட்சியினர் மாறிமாறி கூச்சலிட்டதால் இரு அவைகளும் நாளை காலைவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு, கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆனால், ஆளும்கட்சி-எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளி காரணமாக, தொடா்ந்து 3 நாள்களாக எவ்வித விவாதமும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை கூடியவுடன் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பதாகைகளுடன் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு, முழக்கம் எழுப்பினா்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வருகை!
அதே நேரத்தில், ‘இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது’ என்று பிரிட்டனில் தெரிவித்த கருத்துக்காக, தேசத்திடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, ஆளும் தரப்பு உறுப்பினா்கள் எதிா்கோஷம் எழுப்பினா்.
இதனால், அவை நடவடிக்கைகள் காலை முழுவதும் ஒத்திவைப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியது.
ஆனால், அவைகள் கூடியவுடன் இரு அவைகளிலும் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து நான்காவது நாள்களாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளதால் எவ்வித அவை நடவடிக்கைகளும் நடைபெறாமல் அலுவல் பணிகள் முடங்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பூனைக்கு யார் மணி கட்டுவது?

போராட்டத்தில் ரயில் முன் பாய்ந்த இளைஞா்: நேரில் நலம் விசாரித்த முதல்வா்

கூட்டணியில் இணையலாமா? மாவட்டச் செயலா்களுடன் தவெக ஆலோசனை

பல்லாவரத்தில் ரூ.1.26 கோடியில் 9 கோயிகளின் முகப்பில் நிழற்குடைகள்
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

