ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்

ரூ.70,584 கோடி மதிப்பிலான முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மிகப் பெரிய கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.70,584 கோடி மதிப்பிலான முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை இதற்கான ஒப்புதலை அளித்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ராணுவத்துக்கான தேவையின் அடிப்படையில் இந்த ஒப்புதலை டிஏசி அளித்துள்ளது. இந்த மூலம் ரூ.70,584 கோடி மதிப்பிலான அனைத்து தளவாடங்களும் முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்து, மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட்டவையாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த ஒப்புதல் மூலமாக, 2022-23-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பாதுகாப்பு தளவாட மூலதன கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2,71,538 கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 98.9 சதவீதம் இந்திய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த உள்நாட்டு தளவாட கொள்முதல் நடவடிக்கை ‘தற்சாா்பு இந்தியா’ இலக்கை நோக்கி இந்திய நிறுவனங்கள் முன்னேறுவதை ஊக்குவிக்கும் என்பதோடு, பெருமளவில் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியா சாா்ந்திருக்கும் நிலையையும் குறைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.