பயன்பாட்டில் இல்லாத 25 விமானங்களை புதுப்பிக்க ஸ்பைஸ்ஜெட் முடிவு!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது சேவையில் இல்லாத தனது 25 விமானங்களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது சேவையில் இல்லாத தனது 25 விமானங்களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. 

இதற்காக, அரசின் அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறப்படும் என்றும் விமானங்களை புதுப்பிக்க ஏற்கெனவே 400 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், சேவையில் இல்லாத விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் இது நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்றும் கூறினார். 

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவாலானதையடுத்து, இந்த சமயத்தில் தங்கள் சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது ஸ்பைஸ்ஜெட். முன்னதாக,  மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் குறைந்த கட்டண விமான சேவையை கோ ஃபர்ஸ்ட் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com