ஜார்க்கண்டில் திருமண விழாவுக்குச் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!
ஜார்க்கண்டின் குல்மா மாவட்டத்தில் திருமண விழாவுக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.


ஜார்க்கண்டின் குல்மா மாவட்டத்தில் திருமண விழாவுக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
தும்ரி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு திருமண விழாவிற்குச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கும்லா காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
விபத்தில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தாக்கும் சக்தியை கடவுள் அளிக்கட்டும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...