கர்நாடக தேர்தல்: பாஜகவின் ஊழல் விகித அட்டையை வெளியிட்ட காங்கிரஸ்
கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,50,000 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் வெளியிட்ட ஊழல் விகித அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,50,000 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் வெளியிட்ட ஊழல் விகித அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.
ஆளும் பாஜக ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களும், அதில் கைமாறப்பட்ட பணம் என ஒரு அட்டையை வெளியிட்டிருக்கிறது. அதில், மாநில ஒப்பந்ததாரர்களால் வழங்கப்பட்ட 40 சதவிகித கமிஷன் தொகை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னடா மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை கடந்த 4 ஆண்டுகளில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 40 சதவிகித கமிஷன் உள்பட 1,50,000 கோடி பாஜகவால் சுருட்டப்பட்டிருப்பதாகவும், முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடியும், அமைச்சர் பதவிகளுக்கு ரூ.500 கோடியும் பெறப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்த ஒப்பந்தக் கட்டணம் என்பது துறைக்குத் துறை மாறுபடுவதாகவும், மணல் கொள்ளைக்கு 30 சதவிகிதம், சாலை ஒப்பந்தத்துக்கு 40 சதவிகிதம், கரோனா பொருள்கள் வழங்க 75 சதவிகிதம் என செல்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கர்நாடக பாஜக அரசை டபுள் என்ஜின் அரசு என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்வதை, கிண்டல் செய்திருக்கும் காங்கிரஸ், டிரபுள் என்ஜின் அரசு என்று கூறியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...