
மத்திய பிரதேசத்தில் நிலத்தகராறில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 3 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் லெபா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தீர் சிங் தோமர் மற்றும் கஜேந்திர சிங் தோமர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு குப்பை கழிவுகளைக் கொட்டுவது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது தீர் சிங் தோமரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் நீதிமன்றத்தின் மூலமாக இரு குடும்பத்தினரும் சமரசம் செய்துகொண்ட நிலையில், கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் இன்று கிராமத்திற்குத் திரும்பியுள்ளனர். அப்போது, தீர் சிங் குடும்பத்தினர் கஜேந்திர சிங் குடும்பத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் கஜேந்திர சிங் தோமர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் 3 பெண்கள் என 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே இருந்த பழைய பகை தான் இந்த தாக்குதலுக்கு கரணம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.