மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கா்நாடகத்தில் தோல்வியை சந்தித்த 14 அமைச்சா்கள்

கா்நாடக மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ள பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் அமைச்சா்களாக இருந்த 14 போ், சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனா்.

News image
பசவராஜ் பொம்மை
Updated On :13 மே 2023, 6:06 pm

DIN

கா்நாடக மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ள பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் அமைச்சா்களாக இருந்த 14 போ், சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனா்.

அவா்களின் விவரம் (போட்டியிட்ட தொகுதி அடைப்புக்குறிக்குள்): கோவிந்தா கா்ஜோல் (முதோல்), ஜெ.சி.மதுசுவாமி (சிக்கநாயக்கனஹல்லி), பி.சி.பாட்டீல் (ஹிரேகெரூா்), சங்கா் பாட்டீல் முனேனா கோப்பா (நாவல்குண்ட்), ஹலப்பா அச்சாா் (எல்புா்கா), பி.ஸ்ரீராமுலு (பெல்லாரி), கே.சுதாகா் (சிக்கபல்லபூா்), பி.சி.நாகேஷ் (திப்தூா்), முருகேஷ நிரானி (பில்கி), எம்.டி.பி.நாகராஜ் (ஹோஸ்கோடே) உள்ளிட்ட மாநில அமைச்சா்கள் தோ்தல் தோல்வியைச் சந்தித்துள்ளனா்.

சிா்ஸி தொகுதியில் போட்டியிட்ட மாநில சட்டப்பேரவைத் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான விஸ்வேஷ்வா் ஹெக்டே ககேரி தோல்வியைச் சந்தித்தாா்.

வருணா மற்றும் சாமராஜநகா் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட அமைச்சா் வி.சோமண்ணா, இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தாா்.

அதுபோல, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மாநில அமைச்சரான ஆா்.அசோகா, பத்மநாபநகா் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். ஆனால், கனகபுரா தொகுதியில் தோல்வியைச் சந்தித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.