கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கை விட 59,709 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130 இடங்களைக் கடந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார். 

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, மேலும் 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 

பாஜக - 66, மஜத - 22, சுயேச்சை -3, பிற கட்சிகள் - 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கை விட 59,709 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com